யாழில் ஒரே நாளில் இரு பெண்கள் தூக்கில் தொங்கிய நிலையில் சடலங்களாக மீட்பு

body_foundயாழில் தூக்கில் தொங்கிய நிலையில் இரு பெண்களின் சடலங்களை பொலிஸார் மீட்டள்ளனர்.

இவ் இரு சடலங்களும் யாழ். போதனா வைத்தியசாலையில் சட்டவைத்திய அதிகாரியின் பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டன.

யாழ். மயிலணி வடக்கு சுன்னாகம் பகுதியில் தூக்கிலிட்டு மரணமடைந்ததாகத் தெரிவிக்கப்படும் மதிவாணன் தர்சினி (வயது 27) என்ற பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவேளை தெல்லிப்பழைப் பகுதியில் மற்றுமொரு பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் வெளிநாட்டில் இருந்து வந்திருந்த விஜியராசா சோபிதா (வயது 33) என்ற பெண் என தெரியவந்துள்ளது.