யாழில் ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் அனுஷ்டிப்பு!

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல் கலாமின் 90 ஆவது ஜனனதினம் இன்று யாழ்ப்பாணத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.

இந்திய துணை தூதரகத்தின் ஏற்பாட்டில் இன்று காலை யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில், அப்துல் கலாமின் உருவ சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செலுத்தப்பட்டது.

நிகழ்வில் யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணை தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன், வடக்கு மாகாண சபை அவைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், யாழ்ப்பாண மாநகர முதல்வர் வி.மணிவண்ணன், யாழ்ப்பாணப் பொதுசன நூலகம் பிரதம நூலகர் மற்றும் இந்திய துணை தூதரக அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: Editor