புகழ்பெற்ற இந்திய திரைப்பட பின்னணிப் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் இசை நிகழ்ச்சியொன்றும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இலங்கையில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
”நண்பேண்டா” என பெயரிடப்பட்டுள்ள குறித்த இசை நிகழ்ச்சி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெறவுள்ளது.
இசைக்கலைஞர் , இயக்குனர் , பாடகர் என பல முகங்களைக் கொண்ட கங்கை அமரனின் இசைக்குழுவும் இதன்போது இலங்கை வரவுள்ளது.
இசை நிகழ்ச்சியை நடத்தவுள்ளார்.
இந்நிலையில் இவர்களுடன் மேலும் பல பிரபல்யமான பின்னணிப் பாடகர்களும் குறித்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
1966 ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் பாடி திரைத்துறையில் கால் பதித்த எஸ்.பி. பாலசுப்பிரமணியம், அன்று முதல் இன்று வரை 38 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
இந்நிகழ்ச்சியை ஐங்கரன் மீடியா சொல்யுசன்ஸ் மற்றும் எயரவன்ற் மீடியா ஆகிய நிறுவன ங்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளன.
இந்நிகழ்வு தொடர்பில், ஊடகவியலாளர் சந்திப்பொன்று அண்மையில் கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் இடம்பெற்றிருந்த து.
இதன்போது கருத்து தெரிவித்த ஏற்பாட்டாளர்கள், நிகழ்ச்சி மூலம் கிடைக்கும் வருவாயில் ஒரு தொகை நல்லெண்ணத்திட்டமொன்றுக்கு வழங்கப்படவுள்ளதாக குறிப்பிட்டனர்.
இந்நிகழ்ச்சி நிச்சயம் நடைபெறுமென உறுதியளித்த நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் , நிகழ்வு தொடர்பான மேலதிக தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படுமென தெரிவித்தனர்.