யாழில்.ஊடகவியலாளர் வீட்டில் 51 பவுண் நகை திருட்டு

யாழில் சிரேஸ்ட ஊடகவியலாளர் வீட்டினுள் உள்நுழைந்த திருடர்கள் 51 பவுண் தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர்.

வல்வெட்டித்துறை உடுப்பிட்டி பகுதியில் வசிக்கும் சிரேஸ்ட ஊடகவியலாளரான இரட்ணம் தயாபரனின் வீட்டிலையே இந்த திருட்டு சம்பவம் நேற்று புதன் கிழமை மதியம் இடம்பெற்று உள்ளது.

வீட்டில் இருந்து கணவன் , மனைவி வேலைக்கு சென்று இருந்த சமயம் பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று இருந்த போது மதிய நேரம் வீட்டில் எவரும் இல்லாத நேரத்தினை பயன்படுத்திய கொள்ளையர்கள் வீட்டு வளவுக்குள் சென்று வீட்டின் ஜன்னல் கம்பிகளை வளைத்து அதனூடாக உட்சென்று நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

குறித்த திருட்டு சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

Related Posts