யாழில் இளைஞர் கடத்தப்பட்டார்

kidnapping1யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் வெள்ளை வானில் வந்தோரினால் நேற்று திங்கட்கிழமை மாலை கடத்தப்பட்டுள்ளதாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சண்டிலிப்பாய் சங்குவேலி பிள்ளையார் கோவிலடியில் வைத்தே குறித்த இளைஞன் நேற்று மாலை 5.10 மணியளவில் கடத்தப்பட்டுள்ளார்.

ஆணைக்கோட்டை சோமசுந்தரம் வீதியைச்சேர்ந்த கந்தையா ஜெயசுதன்( வயது 28) என்ற இளைஞன் கடத்தப்பட்டுள்ளதாக அவரது உறவினர்கள் மானிப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக மானிப்பாய் பொலிஸார் தெரிவித்தனர்.