யாழில் இந்தியக் குழு உள்ள நிலையில் பாதுகாப்பு செயலர் திடீர் வருகை?

Koththapaya-rajaஇந்தியக் குழுவினர் வடக்கிற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள நிலையில் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ இன்று யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர் யாழ்ப்பாணத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளதாகவும் இத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள இந்தியப் பாராளுமன்ற உறுப்பினாகள் அடங்கிய குழுவினர் இன்று யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் பல நிகழ்வுகளில் கலந்து கொள்ளவுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.