யாழில் இந்தியக் கல்விக் கண்காட்சி

India_-ashok_kanthaஇந்திய துணைத்தூதரகத்தின் ஏற்ப்பாட்டில் இந்தியக் கல்விக் கண்காட்சி எதிர்வரும் 05 ஆம், 06 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக யாழ் இந்திய துணைத்தூதுவர் எ.மகாலிங்கம் தெரிவித்துள்ளார்.

இக்கண்காட்சி தொடர்பில் இந்திய துணைத்தூதரகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 5ஆம் 6ஆம் திகதிகளில் யாழ் மத்திய கல்லூரி மண்டபத்தில் காலை 10.30 மணி தொடக்கம் மாலை 6.30 மணிரை வரையும் மறுநாள் 6ஆம் திகதி காலை 10.30 மணி தொடக்கம் 12.30 மணிரை நடைபெறவுள்ளதாகவும் இக் கண்காட்சிக்கு பிரதம அதீதியாக வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ.சந்திரசிறி கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வடமாகாணத்தில் உள்ள மாணவர்களின் கல்வியை மேம்படுத்தும் நோக்கில் இந்தக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கடந்த வருடம் நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தமது உயர்கல்வியைத்திட்டமிடுவதற்கு இது ஒரு வாய்ப்பாக அமையும் என்பதோடு பொறியியல், பல்மருத்துவம், தாதியியல், முகாமைத்துவம்,விவசாயம், விஞ்ஞானம்,கலைப்பாடங்கள் போன்றவற்றில் ஆர்வமுடைய மாணவர்களுக்கு இந்தக்கண்காட்சி இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இக்கல்விக் கண்காட்சியில் இந்தியாவில் இருந்து வருகை தரும் கல்வி ஆலோசகர்களுடன் ஏழு இந்திய கல்வி நிறுவனங்கள் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

ஆத்துடன் இந்தியாவில் கல்வி கற்க விரும்புபவர்கள் தமது சான்றிதழ்களுடன் வருகை தந்து இந்திய நிறுவனங்களில் கல்வி கற்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொள்ள முடியும் என்று அவர் தெரிவித்தார்.