யாழில் இடம்பெற்ற கொலையுடன் தொடர்புடைய நபர் தென்னிலங்கையில் கைது

arrest_1யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் தென்னிலங்கையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

முதலாவது சந்தேக நபரை கலேவலயில் வைத்து கைது செய்துள்ளதாக கலேவல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 27ஆம் திகதி யாழ்ப்பாணப் பகுதியில் வைத்து அப்துல் காதர் நிஹார் என்பவரை படுகொலை செய்ததாகக் சந்தேகிக்கப்படும் கலேவல பகுதியை சேர்ந்த ஹசைன் கஸ்மித் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய நான்கு பேரை ஏற்கனவே பொலிஸார் கைது செய்ததுடன் அவர்களின் வாக்கு மூலத்தின் அடிப்படையிலேயே குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இக்கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் தேடப்பட்டு வருவதாகவும் அவர்கள் இருவரும் மிக விரைவில் கைது செய்யப்படுவார்கள் எனவும் யாழ் பொலிஸார் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.