அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான நட்புறவை வௌிப்படுத்தும் முகமாக நேற்று அமெரிக்காவின் 40 பேர் கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஐயம் செய்துள்ளனர்.
இவர்கள் கோப்பாய் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட வலளால் – இடைக்காடு மகா வித்தியாலத்திற்கு சென்று அங்கு நடமாடும் மருத்துவ சேவையினையும் வழங்கினர்.
யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
இதேவேளை இன்னும் 5 நாட்கள் நாட்டில் தங்கியிருக்கும் இந்த அமெரிக்க வைத்தியக் குழுவினர் ஊர்காவற்துறை, வேலனை, நெடுந்தீவு, பருத்தித்துறை ஆகிய பிரதேச செயலங்களுக்கு உட்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்குள்ள மக்களுக்கும் இவ் நடமாடும் சேவையினை வழங்கவுள்ளதாகவும், தெரியவந்துள்ளது.
இதில் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் எஸ்.சத்தியமூர்த்தி மற்றும் பாதுகாப்பு படைத் தலைமை அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.