யாழில் அனர்த்த முகாமைத்து பயிற்சி பட்டறை

jaffna_kachari_newயாழில். அனர்த்த முகாமைத்துவ பயிற்சி பட்டறை இன்று நடைபெற்றது. யாழ். மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ அதிகாரி சங்கரப்பிள்ளை ரவி தலைமையில் யாழ். மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றது.

இப்பயிற்சி பட்டறையில் பிரதம விருந்தினராக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் கலந்து கொண்டார்.

அனர்த்தங்கள் ஏற்படும் போது அவற்றில் இருந்து எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது மற்றும் அனர்த்தத்தின் பின்னரான செயற்பாடுகள் தொடர்பாக அனர்த்த முகாமைத்துவ உதவிப் பணிப்பாளர் ரிபா வத்து கருத்துரைகள் வழங்கப்பட்டன.

இதன்போது, சஹானா எனும் இணையத்தளம் உருவாக்கப்பட்டதுடன், இணையத்தளத்தின் ஊடாக அனர்த்தங்களை அறிதல் மற்றும் அனர்த்தங்கள் தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளல், சேகரித்தல் தொடர்பாக பயிற்சிகளும், விளக்கங்களும் அளிக்கப்பட்டன.

இப்பயிற்சி பட்டறையில், யாழ். மாவட்ட பிரதேச செயலாளர்கள் மற்றும், பட்டதாரி பயிலுனர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Posts