யாழிலுள்ள மீனவக் குடும்பங்களின் நிலைமை பரிதாபமானது: எமிலியாம்பிள்ளை

ebiliyambillaiயாழ். மாவட்டத்திலுள்ள 50,000 மீனவக் குடும்பங்களின் நிலைமை மிக மோசமாக இருப்பதுடன், பரிதாபமாக இருப்பதாகவும் யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சமாசத்தின் சம்மேளனத் தலைவர் அந்தோனிப்பிள்ளை எமிலியாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

யாழ். மாவட்ட கடற்றொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்க சம்மேளனத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினர்களிடமும் பல தடவைகள் கலந்துரையாடினோம். ஆனால், கலந்துரையாடல்களினால் எந்தவித முடிவுகளும் கிடைக்கவில்லை எனவும் அவர் கூறினார்.

மேலும், இந்திய – இலங்கை மீனவர்கள் கடல் எல்லையைத் தாண்டும்போது கைதுசெய்யப்படுகின்றார்கள். அவ்வாறான நிலையில் கூட அங்கத்துவ சமாசங்களிடம் கதைக்கவில்லை. இவ்வாறான சூழ்நிலை வியப்படைய செய்கின்றது எனவும் அவர் கூறினார்.

மேலும், எதிர்வரும் 20ஆம் திகதி சென்னையில் நடைபெறவுள்ள பேச்சுவார்த்தைக்கு வடபகுதி மீனவச் சங்கங்களுக்குத் தகவல்கள் தெரிவிக்கப்படவில்லை. இவ்வாறான நிலைமைகள் வேதனை தருகின்றதாகவும் அவர் கூறினார்.