Ad Widget

யாழிலிருந்து ஹட்டன் நோக்கிப் புறப்பட்ட பேருந்து மீது தாக்குதல் – இருவர் காயம்

யாழ்ப்பாணத்திலிருந்து ஹட்டன் நோக்கிப் பயணித்த பேருந்து மீது கொடிகாமம் பகுதியில் இனந்தெரியாதோரால் கல்வீச்சுத் தாக்குதலொன்று நடத்தப்பட்டுள்ளது.

இதன்போது பேருந்தில் பயணம் செய்த இருவர் காயமடைந்துள்ளனர்.

கொடிகாமம் சந்திக்கு அருகிலுள்ள கைகாட்டிச் சந்திக்கு அருகில் வைத்து, மறைந்திருந்து மேற்கொள்ளப்பட்ட இந்த கல்வீச்சுத் தாக்குதலில் பேருந்தின் கண்ணாடிகள் உடைந்துள்ளன.

இச்சம்பவம் குறித்து கொடிகாமம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Posts