யாழிலிருந்து படகுமூலம் அவுஸ்திரேலியா செல்ல முயன்ற 58 பேர் கைது

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியிலிருந்து  சட்டவிரோதமாக படகுமூலம்  அவுஸ்திரேலியாவுக்கு செல்ல முயன்றதாக கூறப்படும் 58 பேர் இன்று அதிகாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சுமார் இரு மணித்தியாலங்கள் கடலில் பயணம் செய்தபின் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும்  இவர்கள் கடற்படையினரால் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.