யாழிலிருந்து கொழும்பு, பதுளை செல்லும் பேருந்துகள் மீது கல்வீச்சு

யாழ்ப்பாணத்தில் இருந்து பதுளை மற்றும் கொழும்பு செல்லும் பேருந்துகளுக்கு கெக்கிராவை – மரதன்கடவல நகரில் வைத்து கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த பேருந்துகளின் சாரதிகள் இதனைத் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையும் தியதலாவையை நோக்கி சென்ற யாழ்ப்பாண பேருந்து ஒன்றின் மீது இவ்வாறு கல்வீச்சுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் பேருந்தின் பணிகள் சிலரும் சாரதியும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Posts