யாழிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பஸ் மீது தாக்குதல்

யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்துக்கொண்டிருந்த தனியார் பஸ் ஒன்றின் மீது இனந்தெரியாத ஆயுததாரிகள் சிலரால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.திங்கட்கிழமை அதிகாலை 3 மணியளவில் அநுராதபுரம் இராஜாங்கனைப் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த சமயம் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி வருகை தந்துகொண்டிருந்த பஸ் ஒன்றில் ஆயுங்களுடன் பயணித்த சிலர், திடீரென் மேற்படி பஸ்ஸுக்குள் புகுந்து சாரதியையும் நடத்துனவையும் கஐமயாகத் தாக்கியுள்ளனர்.

இது தொடர்பில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.