யாழிற்கு தைப்பொங்கலுடன் நிரந்தர மின்சாரம்

யாழ்.மாவட்டத்திற்கு எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் நிரந்தர மின்சார வழங்கப்படவுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க அறிவித்துள்ளதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

பட்டதாரி பயிலுனர்களுக்கான ஆட்சேர்ப்பு நியமனம் வழங்கும் நிகழ்வு யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

‘நிரந்தர மின்சாரம் வழங்குதவற்காக மின் மாற்றிகள் பரிசீலனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் காரணமாக மின்சாரம் தடைப்படும். சந்தர்ப்பங்களில் மக்களின் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது. தைப்பொங்கல் தினத்துடன் நிரந்தர மின்சாரம் வழங்குவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பில் மின்சக்தி அமைச்சர் தொலைபேசி மூலம் உறையாடினார்’ என அவர் மேலும் தெரிவித்தார்.