யாழின் கரையோரப் பாதுகாப்பு தொடர்பில் ஆராய்வு

MAYOR -yokeswareyதற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தால் யாழ். குடாநாட்டின் கடற்கரையோரங்களில் வாழ்கின்ற மக்களின் பாதுகாப்பு தொடர்பில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை ஆராயப்பட்டதாகயாழ். மாநகரசபையின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராசா தெரிவித்தார்.

அனர்த்தங்களின்போது கடற்கரைப் பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களை பாதுகாப்பது மற்றும் அவர்களுக்குத் தேவையான சுகாதார வசதிகளை மேற்கொள்வது உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் யாழ். மாநகரசபைக்கு உட்பட்ட கடற்கரையோரங்களுக்குச் சென்று ஆராய்ந்ததாகவும் அவர் கூறினார்.

இதற்கமைய, அனர்த்தப் பாதுகாப்பு தொடர்பில் கரையோர மக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தல்களை வழங்குவதுடன், சுகாதாரத் துறையைப் பாதுகாப்பதற்காக கடற்கரைப் பிரதேசங்களில் குப்பைத் தொட்டிகளை அமைப்பதற்கும் மேலதிகமான தேவைகளுக்கு உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கும் தீர்மானித்துள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன்போது, யாழ். பிரதேச செயலர் சுகுணவதி தெய்வேந்திரம், யாழ். மாவட்டத்தின் அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.