மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு!!

நாட்டில் நிலவிவரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக, பல்வேறு அரச திணைக்களம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிலியந்தலை – வேரஹெர மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் நாளை முதல்(11.11.2020) மீண்டும் திறக்கப்படவுள்ளதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டுப்படுத்தப்பட்ட சேவையாளர்களுடன் குறித்த திணைக்களம் நாளைய தினம் திற்கப்படவுள்ளதாகவும், நாரஹேன்பிட்டியில் அமைந்துள்ள மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் தொடர்ந்தும் மீள் அறிவிப்பு வரை மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த திணைக்களத்தினால், வழங்கப்படும் சேவைகளை கம்பஹா, அம்பாந்தோட்டை, யாழ்ப்பாணம், குருநாகல் ஆகிய மாவட்ட அலுவலகங்களின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும்மென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய குறித்த மாவட்ட காரியாலயங்களை தொடர்பு கொள்ள கீழுள்ள இலக்கங்களுக்கு அழைப்பினை ஏற்படுத்த முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: Editor