மோட்டார் சைக்கிள்கள் விபத்தில் நால்வர் படுகாயம்

accidentகரவெட்டி புறாப்பொறுக்கி பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் இன்று சனிக்கிழமை (05) இரவு நேருக்கு நேர் மோதியதில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நெல்லியடிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சுழிபுரம் பகுதியினைச் சேர்ந்த தங்கராசா றேக்குமார் (26), கொற்றாவத்தையினைச் சேர்ந்த பொன்னையா கங்காதரன் (44), கரவெட்டியினைச் சேர்ந்த கந்தசாமி ரவீந்திரன் (20), அல்வாய் மேற்கினைச் சேர்ந்த தேவராசா லோறன்ஸ் றெஜிகரன் (33) ஆகியோரே படுகாயமடைந்தனர்.

இவர்களில் ஒருவர் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையிலும், மற்றைய மூவரும் யாழ். போதனா வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.