மோட்டார் சைக்கிள்களுக்கான பணத்தினை மீளப் பெறவும் – பொதுத்திறைசேரி அறிவிப்பு

அரச அலுவலகங்களில் கடமையாற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கும் திட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம்திகதிக்குப்பின்னர் பணம் செலுத்தியவர்கள் தங்களது பணத்தினை முறையாக மீளப் பெற்றுக் கொள்ள வேண்டும் என பொதுத்திறைசேரியின் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அறிவித்தல் விடுத்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அமைச்சின் செயலாளர்கள், மாகாண பிரதம செயலாளர், மாவட்டச் செயலாளர்களுக்கு வெளிக்கள உத்தியோகத்தர்களினால் 2014.12.31ஆம் திகதிக்குப்பின்னர் மோட்டார் சைக்கிள்களுக்கான வருமானக்கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ள பணம் தொடர்பாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் என்ற தலைப்பில் பணிப்பாளர் நாயகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள அறிவித்தலில், வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு மோட்டார் சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2014.12.31ஆம்திகதிக்கு வரை பணம்செலுத்திய தற்போது அனுமதிக்கப்பட்ட பதவிகளில் இருக்கின்றவர்கள் மற்றும் உரிய பதவிகளை பூர்த்தி செய்துள்ள உத்தியோகத்தர்களுக்காக மட்டும் மோட்டார் சைக்கிள் வழங்குவதற்கு எடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்காலத்தில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது. ஆகையால் 2014.12.31ஆம் திகதிக்குப்பின் அரச வருமானத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டுள்ள தொகை அக்கணக்கிலிருந்து முறையாக மீளப் பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தயவுடன் தெரிவித்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்த வகையில் 2014.12.31க்குப்பின்னர் பணம் செலுத்திய அனைத்து உத்தியோகத்தர்களும் தங்களது திணைக்களத் தலைவர்களின் ஊடாக செலுத்திய பணத்தினை இம்மாதத்திற்குள் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று பொதுத்திறைசேரியின் தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Posts