Ad Widget

மோடி கூறுவதை நடைமுறைப்படுத்தவும்: எமிலியாம்பிள்ளை

இந்திய மீனவர்கள், இலங்கை எல்லைக்குள் அத்துமீறாத வகையில், மீன் இருக்கும் கடற்பகுதியை செயற்கை கோள் மற்றும் தொழில்நுட்பங்களின் உதவியுடன் அடையாளப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருந்த விடயத்தை உடன் அமுல்படுத்துமாறு யாழ்.மாவட்ட மீனவர் சங்க சம்மேளனங்களின் சமாசத் தலைவர் எஸ்.எமிலியாம்பிள்ளை தெரிவித்தார்.

‘மோடி அறிவித்த திட்டத்தை உடனே நடைமுறைப்படுத்துவதன் மூலம், எங்கள் கடல் வளம் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரம் என்பன பாதுகாக்கப்படும். எமது கடல் வளம் விரைவாக அழிவடைந்து செல்கின்றது’ என்றார்.

‘பாகிஸ்தான் எல்லையை தாண்டுகின்றது என சண்டையிடும் இந்தியா, ஏன் இலங்கையின் கடல் எல்லையை தாண்டுகின்றார்கள். இந்திய மீனவர்களிடம் நாங்கள் எதுவும் கேட்கவில்லை. எங்கள் எல்லையை தாண்டாமல் விட்டால் போதும்’ என்றார்.

‘இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் அண்மையில் அதிகம் கைது செய்யப்படுகின்றனர். அவர்களின் கைதுகள் காணாது. கைது செய்யப்பட்டு, விடுவிக்கப்படும் போது, அவர்களில் உபகரணங்களை மீள வழங்கக்கூடாது. அவ்வாறு வழங்கினால் அவர்கள் மீண்டும் எல்லை தாண்டுவார்கள்’ என்றார்.

‘இந்திய மீனவர்களின் தாரக மந்திரமாக, ‘கச்சதீவுக்கு அண்மையிலேயே தாங்கள் மீன்பிடியில் ஈடுபடுகின்றோம்’ என்பது காணப்படுகின்றது. ஆனால் அத்துமீறும் மீனவர்களை பிடித்து, அவர்களை அவ்விடத்திலேயே நங்கூரமிட்டு தடுத்து வைக்கப்பட்டு, உங்கள் நாட்டு மீனவர்கள் எல்லை தாண்டுகின்றனர் என்பதை அவர்களுடைய நாட்டுப் பிரதிநிதிகளுக்கு அதனைக் காட்ட வேண்டும்’ என்றார்.

Related Posts