மோசடி திருமணம் செய்த நபருக்கும் பதிவாளருக்கும் விளக்கமறியல்!!

முதல் திருமணத்தை மறைத்து பிரான்ஸ் குடியுரிமை பெற்ற யுவதியை திருமணம் செய்து, 45 இலட்சம் சீதனமும் வாங்கிய ஆசாமியும், பதிவுத்திருமணம் செய்து வைத்த பதிவாளரும் நேற்று பொலிசாரிடம் சிக்கியுள்ளனர்.

கைதான இருவரையும் யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் நிறுத்தியபோது எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தென்பகுதியை சேர்ந்த தமிழ் பெண்ணொருவரும் யாழ் வாலிபரும் சந்தித்து நட்பை வளர்த்துள்ளனர். நட்பு காதலானது. பின்னர் பெண் பிரான்சுக்கு சென்று அகதி அந்தஸ்து பெற்றுள்ளார்.

பிரான்சிலிருந்து 2014 இல் யாழ்ப்பாணம் வந்த யுவதி, அந்த வாலிபனையே திருமணம் செய்தும் கொண்டார். திருமணத்திற்காக 45 இலட்சம் ரூபா சீதனமும் வழங்கப்பட்டுள்ளது.

திருமணத்தின் பின்னர் பிரான்சுக்கு சென்ற பெண், வாலிபனை அங்கு அழைக்க பலத்த முயற்சிகள் செய்தார். எனினும், வாலிபன் அங்கு செல்லாமல் போக்குகாட்டியபடியே இருந்தான். இதனையடுத்து யாழ்ப்பாணத்திற்கு திரும்பி வந்த பெண், வாலிபன் எதற்காக பிரான்ஸ் வர தயங்குகிறான் என்பதை ஆராய்ந்தபோதுதான், வாலிபன் ஏற்கனவே திருமணமான விடயம் அம்பலத்திற்கு வந்தது.

அதனையடுத்து பெண் யாழ்ப்பாணம் விசேட குற்றத்தடுப்பு பிரிவில் முறைப்பாடு செய்தார். இதனையடுத்தே இருவரும் கைதாகினர்.

Recommended For You

About the Author: Editor