மைத்திரி, ரணில் அரசால் தமிழர் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும்! உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை

சிறிசேன – ரணில் அரசாங்கத்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது உலகத் தமிழர் பேரவை.

காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான அலுவலக சட்ட மூலத்தை இலங்கை அரசு நிறைவேற்றியமை உலகத் தமிழர் பேரவை வரவேற்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அந்த அமைப்பு மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

இது குறித்து உலகத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டவை வருமாறு:

பொறுப்புக்கூறல் மற்றும் நீதி, நல்லிணக்கத்தின் முதல் படியாக இது அமைந்துள்ளது என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

சிறிசேன – ரணில் தலைமையிலான அரசாங்கத்தின் இந்த முயற்சி மூலம் காணாமல் போகச் செய்யப்பட்டோருக்கான ஆயிரக்கணக்கானவர்களின் நிலை என்னவென்பதைக் கண்டறிய முடியும்.

இந்தச் சட்டமூலத்துக்கு ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி ஆகியவற்றுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி. ஆகியவை ஆதரவு வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் தமிழர்களின் நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்வு கண்டு நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என உலகத் தமிழர் பேரவை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Recommended For You

About the Author: Editor