மேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த கோரிக்கை

ctb_busமேலதிக பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு கோரிக்கை ஒன்றினை இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவிடம் முன்வைத்துள்தாக போக்குவரத்து சபை முகாமையாளர் அஸ்ஹர் தெரிவித்தார்.

இலங்கை போக்குவரத்து சபையின் வருடாந்த ஒன்று கூடல் நிகழ்வு யாழ். கோண்டாவில் டிப்போவில் நேற்று நடைபெற்றது.

இதன்போதே யாழ், காரைநகர், முல்லைத்தீவு, பருத்தித்துறை, கிளிநொச்சி, மன்னார் வவுனியா மாவட்ட பேருந்து சங்க ஊழியர்கள் இக்கோரிக்;கையினை முன்வைத்துள்ளனர்.

இலங்கை போக்குவரத்து சபை உபதலைவர் வி. விமலரட்ணவுடன் கலந்துரையாடிய அவர்கள்,

தற்போதுள்ள ஒரு பேருந்தின் வருமானம் போதாமல் உள்ளது. மேலதிகமாக பேருந்துகளை வழங்கினால் அவற்றின் மூலம் வருமானத்தினை அதிகரிக்கச் செய்யும் வாய்ப்பு இருக்கின்றன’ என்று தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, தாம் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகள், தமது குறைபாடுகள் குறித்தும் தலைவரிடம் எடுத்துரைத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor