யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டரங்கு திறந்து வைக்கப்படவிருந்த சமயத்தில் மேடை ஏறிய வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் கால் தடுக்கி கீழே விழுந்துள்ளார்.
இந்த நிலையில், மேடையில் நின்றிருந்த ஜனாதிபதி மைத்திரிபால பதறிப் போய் முதலமைச்சருக்கு அருகில் செல்ல முற்பட்ட வேளை அங்கு நின்ற அதிகாரிகளால் முதலமைச்சர் தூக்கி விடப்பட்டுள்ளார்.
முதலமைச்சர் தனது வேட்டி தடுக்கி கீழே விழுந்தாரா? அல்லது நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த சிவப்பு கம்பளம் வழுக்கி விழுந்தாரா ? இல்லை மேடையில் அடுக்கப்பட்டிருந்த நாற்காலி தடக்கி விழுந்தாரா என்பது கேள்விக் குறி.
அதுமட்டுமின்றி, இவை அனைத்தையும் இந்தியப் பிரதமர் மோடி காணொளியில் அவானித்துக் கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.