அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகம் மொனோ சோடியம் குளுட்டாமேட் காணப்படுவதால் இந்தியாவில் தடைசெய்யப்பட்ட மெகி நூடில்ஸ் உள்ள சரக்குகளை இறக்குமதியாளர்களுக்கு வழங்குவதை நிறுத்துமாறுஇலங்கை சுங்க திணைக்களத்திடம் நுகர்வோர் அதிகார சபை நேற்று செவ்வாய்க்கிழமை(23) கோரியுள்ளது.
இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மெகி நூடில்ஸை தடை செய்யுமாறு இலங்கைக்கான இந்திய தூதரகம் நுகர்வோர் அதிகார சபையிடம் கோரியிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.