மூளை சுவையை அறிவது எப்படி என்ற கேள்விக்கு விஞ்ஞானிகள் விடை கண்டனர்!

மூளை எவ்வாறு சுவையை உணர்கிறது என்பது தொடர்பில் விஞ்ஞானிகள் இடையே நெடுங்காலமாக இருந்துவந்த ஓரு விவாதத்திற்கு தீர்வை எட்டியுள்ளதாக அமெரிக்க விஞ்ஞானிகள் சிலர் நம்புகின்றனர்.

taste_food

உப்பு, கசப்பு, இனிப்பு, புளிப்பு மற்றும் உப்பு உரைப்பான உமாமி சுவை ஆகிய ஐந்து வகையான சுவைகளுக்கும் என தனித்தனியான விசேட நியூரான்கள் (உணர்வு உயிரணுக்கள்) மூளையில் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

வெவ்வேறு சுவைகொண்ட உணவுகளை சுண்டெலிகளுக்கு கொடுக்கும்போது அவற்றின் மூளையில் ஒவ்வொரு நியூரானிலும் ஏற்படுகின்ற மாற்றத்தை அவதானித்து கொலம்பியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளனர்.

உணவு நாளுக்கு நாள் சுவையில்லாமல் போவதாக உணரும் வயோதிகர்களுக்கு சுவையுணர்வு அதிகரிக்க வழிதேடுவதற்கு இந்த ஆராய்ச்சி உதவும் என்று நம்பப்படுகிறது.