மூன்று மாதங்களில் வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழப்பு

meeting_jaffna_police_jeffreeyகடந்த மூன்று மாதங்களில் யாழில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக யாழ்.மாவட்ட பிரதிப்பொலிஸ் அத்தியட்சகர் முகமட் ஜெப்றி தெரிவிததார்.

இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

வீதி விபத்துக்களை தடுக்கும் நோக்கில் வீதியில் துவிச்சக்கரவண்டிகளுக்கு டைனமோ பொருத்துதல, சமாந்தரமாக செல்வதைத் தவிர்க்குமாறு பொதுமக்களிற்கு அறிவித்தல் விடுத்துள்ளபோதும் பொதுமக்கள் இந்த விடயத்தினை உதாசீனம் செய்து வருகின்றனர்.

குறிப்பாக வீதியில் சமாந்தரமாகச் செல்லும் செயற்பாடு அதிகரித்துச் செல்லுகின்றது.

இதனால் விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றது. கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்’ என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Recommended For You

About the Author: Editor