மூன்று பாடங்களில் ஏ சித்தி பெற்றிருந்தும் பல்கலை செல்ல அனுமதியில்லை!- சஞ்சீவ பண்டார

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் ஏ சித்திகள் பெற்றும் பல்கலைக்கழகம் செல்ல அனுமதி கிடைக்காவிட்டால் கல்வியில் உள்ள நியாயம் இதுதானா? என அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் சஞ்சீவ பண்டார கேள்வி எழுப்பியுள்ளார்.இஸட் புள்ளி வெளியிடப்பட்டதன் பின் ஏற்கனவே பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவர்கள் சிலர் பல்கலைக்கழக அனுமதி கிடைக்காமல் பாதிக்கப்பட்டுள்ளனர் இதனை ஏற்றுக் கொள்ள முடியாது.

பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மாணவர்களுக்கும் அநீதியின்றி தீர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

2012ம் ஆண்டு உயர்தர பரீட்சை எழுத ஒரு வாரத்தில் அனுமதி பெற்றுத் தருவதாக அரசாங்கம் கூறியுள்ள போதும் ஒரு வாரத்தில் பரீட்சைக்குத் தோற்ற தயாராக முடியுமா? என கேள்வி எழுபியுள்ள அவர்,

அரசாங்கம் மக்களை மாடு என நினைத்துள்ளதா புதிதாக வெளியாகிய இஸட் புள்ளியினால் பல்வேறு மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.

இதனை கண்டித்து நாளை தொடக்கம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாகவும், இவ் ஆர்ப்பாட்டத்தில் பங்குபற்றுமாறு பெற்றோரிடம் அழைப்பு விடுப்பதாகவும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Related Posts