மூன்றாம் உலகப் போர் துவங்கிவிட்டது – உறுதி செய்த அமெரிக்கா

மேற்குலகம் ஏற்கனவே ரஷ்யாவுடன் மூன்றாம் உலகப் போரில் சிக்கியுள்ளதாகவும் ஆனால் மேற்கத்திய நாடுகள் அதை ஒப்புக்கொள்ளாது என வெள்ளைமாளிகை முன்னாள் ஆலோசகர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

விளாடிமிர் புடினின் ரஷ்யா பற்றிய உலகின் தலைசிறந்த நிபுணர்களில் ஒருவரான பியோனா ஹில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரஷ்யாவிற்கும் உக்ரைனின் மேற்கத்திய நட்பு நாடுகளுக்கும் இடையே அதிகரித்து வரும் பதட்டங்களைப் பற்றி அவர் விவாதித்துள்ளார். இதன்படி, உக்ரைன் போரில் பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையிலும் நாம் எதையும் அறிந்துகொள்ளமுடியாத பிரதேசத்தில் இருக்கிறோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வாரம், கிழக்கு மற்றும் தெற்கு உக்ரைன் பிராந்தியங்களில், கிரெம்ளின் வாக்கெடுப்புகளை நடத்திய பின்னர் அணு ஆயுதங்கள் பற்றிய மறைமுக அச்சுறுத்தல்களுடன் புடின் மேற்கு நாடுகளை அச்சுறுத்தினார்.

இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் மீது அணு ஆயுதத்தை பயன்படுத்தி அமெரிக்கா முன்மாதிரியாக இருந்துவிட்டது என தெரிவித்து, உக்ரைன் மீதான நடவடிக்கை இனி என்னவாக இருக்கும் என்பதையும் புடின் கோடிட்டு காட்டியதாகவே கூறுகின்றனர்.

எனினும், அதை நாங்கள் அடையாளம் காணத் தவறிவிட்டோம்” என்று ஹில் கூறியுள்ளார். புடினின் கருத்துக்கள் ரஷ்யாவிற்கும் உக்ரைனுக்கும் இடையிலான போர் ஒரு பரந்த மோதலாக பரவக்கூடும் என்ற கவலையைத் தூண்டியுள்ளது.

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கு எதிராக புடினை எச்சரித்துள்ளார். மேலும் அணு ஆயுதங்கள் பயன்படுத்தப்படுவதற்கான அறிகுறிகளுக்காக அமெரிக்க உளவுத்துறை ரஷ்யாவைக் கண்காணித்து வருகிறது.

இதேவேளை, 2014ல் உக்ரைனின் கிரிமியா பகுதியை ரஷ்யா தன்வசப்படுத்திய வேளையிலேயே அச்சுறுத்தல் ஆரம்பமாகிவிட்டது. ஆனால், ரஷ்யாவின் இந்த போக்கை கட்டுப்படுத்தாவிட்டால், பெரும் ஆபத்து காத்திருக்கிறது என பியோனா ஹில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.