மூதாட்டியை தாக்கி பணம் நகைகள் கொள்ளை

robberyவீட்டில் இருந்த 71 வயது மூதாட்டியை தாக்கிவிட்டு 6 இலட்சம் ரூபா பெறுமதியான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

யாழ். அரியாலை நெடுங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

71 வயது முதாட்டியும் கணவரும் தமது வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவேளை, முகத்தில் கறுப்பு துணி கட்டிய 4 பேர் வீட்டின் சமையலறை முகட்டின் ஊடாக வீட்டிற்குள் நுழைந்து இருவரையும் தாக்கியுள்ளனர்.

இதனால், அவ்விருவரும் மயக்கம் அடைந்துவிட்டனர். இதனையடுத்தே 6 லட்சத்து 67 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகள் மற்றும் பணத்தினை கொள்ளைக்கோஷ்டியினர் கொள்ளையடித்துள்ளதாக யாழ். பொலிஸ் நிலையத்தில் முதாட்டி நேற்று மாலை முறைப்பாடு செய்துள்ளார்.

அம் முறைப்பாட்டில், 12 ½ பவுண் நகைகள், 30 ஆயிரம் ரூபா பணம், 10 ஆயிரம் ரூபா பெறுமதியான துவிச்சக்கர வண்டிகள் என்பன கொள்ளையடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ் கொள்ளைச் சம்பவம் தொடர்பாக தீவிர விசாணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸார் மேலும் கூறினர்.

Recommended For You

About the Author: Editor