முஸ்லிம் மக்களின் பிரச்சினை குறித்து முதல்வர் ஆராய்வு

muslim-mayarயாழ். மாநகரசபை பிரிவுக்குட்பட்ட முஸ்லிம் பகுதிகளுக்கு மாநகர முதல்வர் யோகேஸ்வரி திங்கட்கிழமை திடீர் விஜயம் மேற்கொண்டு அங்கு நிலவும் பிரச்சினைகள் குறித்து மக்களுடன் கலந்துரையாடினார்.

யாழ். முஸ்லிம் பகுதியில் காதி அபூபக்கர் வீதியில் கழிவு நீர் தேங்கி துர்நாற்றம் வீசுகின்றது. இந்நிலைமையினை சமூக சேவகர் ஜெ.டி.எம் நியாஸ் மற்றும் மாநகரசபை உறுப்பினர் எம்.எம்.எஸ் முஸ்தபா ஆகியோர் முதல்வருக்கு அறிவித்ததை அடுத்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது முதல்வரால் மக்களின் பல பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடன் தொடர்பு கொண்ட முதல்வர் உடனடி நடவடிக்கை எடுக்க பணிப்புரை விடுத்தார்.

மேலும், இப்பிரதேசத்தில் பல்வேறு சமூக நலத்திட்டங்களை மேற்கொண்டு வரும் யாழ். முஸ்லிம் உதவும் கரங்கள் பிரதிநிதிகளையும் முதல்வர் சந்தித்து மக்கள் பிரச்சினைகளை உடனடியாக அறியத்தருமாறு கேட்டுக்கொண்டார்.

Recommended For You

About the Author: Editor