Ad Widget

முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று ஆர்ப்பாட்டம்

வடக்கிலிருந்து விடுதலைப் புலிகளினால் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தை வலியுறுத்தி இன்று வெள்ளிக்கிழமை (23) கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரிக்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை நடத்த முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு ஏற்பாடு செய்துள்ளது.

இதேவேளை, கிண்ணியா, அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை மற்றும் கல்முனை உள்ளிட்ட அம்பாறை மாவட்டத்தின் பல பாகங்களிலும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட ங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. இது தொடர்பில், முஸ்லிம் உரிமைகளுக்கான அமைப்பு மற்றும் தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு ஆகியன இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

வடக்கு மாகாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இறுதி வாரத்தில் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் விடுதலைப் புலிகளினால் இனச் சுத்திகரிப்பின் பேரில் சொந்த இடங் களிலிருந்து பலவந்தமாக வெளி யேற்றப்பட்டு 25 வருடங்கள் ஆகின்றன. கால் நூற்றாண்டு காலமாக சொல்லொணா துயரங்களுடன் அம்மக்கள் இன்றும் புத்தளம், குருநாகல், அநுராதபுரம், நீர்கொழும்பு, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் அகதி எனும் அவலவாழ்வை அனுபவிக்கின்றனர்.

யுத்த சூழ்நிலைகள் காரணமாக தமது மீள்குடியேற்றம் சாத்தியமில்லை என செய்வதறியாது இருந்த மக்களுக்கு கடந்த 2009 ஆம் ஆண்டு தமது சொந்த இடத்திற்கு செல்லும் நாட்கள் அருகில் இருக்கின்றன என்கிற நம்பிக்கை பிறந்தது. பல கடும் நிகழ்வுகளை ஏற்படுத்திய யுத்தம் நிறைவுக்கு வந்து 6 ஆண்டுகள் கடந்த நிலையிலும் வடக்கு மாகாணத்தை சேர்ந்த அப்பாவி முஸ்லிம்களின் கனவுகள் இன்னும் நனவாகவில்லை.

இந்நிலையில், அம்மக்களின் மீள்குடியேற்ற விடயத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தமக்குரிய பொறுப்புகளை சரிவர நிறைவேற்றாததன் காரணமாக அனைத்து விடயங்களும் ஸ்தம்பித்து காணப்படுகின்றன. இதற்கு எமது கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற புதிய அரசியல் சூழ்நிலை வடக்கு முஸ்ஸிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பில் அரசாங்கத்தின் கவனயீர்ப்பை பெறுவதற்காக முஸ்லிம் உரிமைகளுக்கானஅமைப்பு (ணிஞிலி) தேசப்பற்றுள்ள இளைஞர் அமைப்பு மற்றும் நாடு முழுவதிலுமுள்ள சமூக நலநோக்கம் கொண்ட சிவில் அமைப்புகள் இணைந்து நாடு தழுவிய கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டமொன்றை வெள்ளிக்கிழமை இன்று (23) நடத்த தீர்மானித்துள்ளது.

இவ்வார்ப்பாட்டத்தை ஜனநாயக ரீதியிலும் மிகவும் ஒழுக்கமான முறையிலும் முஸ்லிம் சமூகத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படாதவண்ணம் மேற் கொள்வதற்கு அழைப்பு விடுக்கிறோம்.

மன்றங்களுக்கும் அரசியல் கட்சிகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் மக்களுக்கு இது தொடர்பிலான மேலதிக தகவல்களை, இவற்றின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும். எல்லை நிர்ணயம், பெயர் மற்றும் இலக்கம் தொடர்பிலான ஆலோசனைகள் அல்லது முறைப்பாடுகள் சம்பந்தமாக குறித்த குழுவினரிடம் தமது தகவல்களை மாவட்ட செயலாளர் ஊடாக வழங்க முடியும் என்றும் அமைச்சர் பைஸர் முஸ்தபா, பொது மக்களையும் அரசியல் கட்சிகளையும் கேட்டுள்ளார்.

எல்லை நிர்ணய குழுவில் முன்னாள் காணி அமைச்சின் செயலாளர் அசோக்க பீரிஸின் தலைமையின் கீழ் இயங்கும் இக்குழுவில் இலங்கை ஏற்றுமதி கடன் காப்புறுதிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஏ.எஸ்.எம். மிஸ்பா (ஐ.தே.க. பிரதிநிதி) சட்டத்தரணி கே. சாலிய மெத்திவ் (ஐ.ம.சு.கூ பிரதிநிதி), சட்டத்தரணி உபுல் குமாரப் பெரும (ம.வி.மு. பிரதிநிதி), பேராசிரியர் பி.பாலசுந்தரம் பிள்ளை (த.தே.கூ. பிரதிநிதி) ஆகியேரே அமைச்சரினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Related Posts