முள்ளிவாய்க்கால் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தம்

SURESHமுல்லைத்தீவில் நாளை திங்கட்கிழமை நடைபெறவிருந்த வட மாகாண சபையின் ஒன்பது உறுப்பினர்கள் சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் வட மாகாண சபை உறுப்பினர்களுக்கான சத்தியப்பிரமாண நிகழ்வு கடந்த வெள்ளிக்கிழமை யாழில் நடைபெற்றது. இந்த நிகழ்வினை தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஒன்பது வட மாகாண சபை உறுப்பினர்கள் பகிஷ்கரித்தனர்.

இவர்கள் நாளை திங்கட்கிழமை முள்ளிவாய்காலில் சத்தியப்பிரமாண செய்யவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர். இந்த நிலையில் மதகுருவொருவரின் தலையிட்டினை அடுத்து சத்தியப்பிரமாண நிகழ்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் குறிப்பிட்டார்.

தன்னிச்சையாக செயற்பட வேண்டாம் எனவும் புறக்கணித்த கட்சிகளிடம் குறித்த மதகுரு வேண்டிக்கொண்டுள்ளார். இந்த ஒன்பது உறுப்பினர்களும் வட மாகாண சபையின் முதலாவது அமர்வின்போது முதலமைச்சர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொள்ளவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.