முல்லைத்தீவில் தீ: மூன்று கடைகள் நாசம்

முல்லைத்தீவு பிரதான வீதியில் உள்ள கடைத்தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று கடைகள் எரிந்து நாசமாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நகைக்கடையொன்றில் ஏற்பட்ட தீ, ஏனைய இரு கடைகளுக்கும் பரவியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது. இதனால் அருகிலிருந்த புடவைக்கடைகள் இரண்டும் எரிந்து நாசமாகியுள்ளன என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸார், இலங்கை மின்சார சபையினர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று திங்கட்கிழமை(20) இரவு 10.15 மணியளவில் இடம்பெற்ற இந்த தீ விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக தெரிவித்த முல்லைத்தீவு பொலிஸார், மின்னொழுகாரணமாகவே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்றும் தெரிவித்தனர்.