முல்லைதீவு மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக முறைப்பாடு

முல்லைத்தீவு ஹிஜ்ராபுரத்தைச் சேர்ந்த பரீத் முகம்மது இல்ஹாம் (வயது 16) என்ற மாணவன் புத்தளத்தில் வைத்து காணாமல் போயுள்ளதாக மாணவனின் பெற்றோரால் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

mukamathu-ishmale

முல்லைத்தீவு தண்ணீரூற்று முஸ்லிம் மஹா வித்தியாலயத்தில் கல்விப் பொதுத் தர சாதாரண தரம் கற்கும் குறித்த மாணவன் 4 அடி 8 அங்குல் உயரமுடையவர் எனவும், காணாமல் போன போது நீல நிற காற்சட்டையும், ரோஸ் நிற சேர்ட்டும் அணிந்திருந்துள்ளார்.

கடந்த மாதம் 27ஆம் திகதி சனிக்கிழமை, குறித்த மாணவன் தனது பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் புத்தளம் தில்லையடி அல்காசிமி சிட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளார்.

இதன்போது, கடந்த 29ஆம் திகதி திங்கட்கிழமை மாலை சகோதரர்களுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தினால், குறித்த மாணவன் வீட்டை விட்டு வெளியேறியதாகவும், அன்றிலிருந்து காணாமல் போயுள்ளார் என்றும் அந்த மாணவனின் பெற்றோர்களினால் புத்தளம் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மாணவன் தொடர்பில் தகவல் ஏதும் தெரிந்தால் உடனடியாக 0713579408 எனும் தந்தையுடைய அலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொள்ளுமாறு குடும்பத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Recommended For You

About the Author: Editor