திவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கை

Murungaiதிவிநெகும செயல் திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு முருங்கைக் கன்றுகள் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இதறக்கென் முப்பதாயிரத்திற்க்கும் மேற்பட்ட முருங்கைக் கன்றுகள் யாழ்.மாவட்டத்திற்க்கு கொண்டுவரப்படவுள்ளன.

யாழ் மாவட்டத்தில் உள்ள கிராம அலுவலர்கள் பிரிவுகள் தோறும் தலா எழுபது முருங்கைக் கன்றுகள் என்ற அடிப்படையில் முதல் கட்டமாக வழங்கப்படவுள்ளதாக யாழ்.மாவட்ட செயலக உயர் அதிகாரி ஒருவர் தொவித்துள்ளார்.

தற்போது இது சம்பந்தமான அறிவித்தலகள் யாழ்.மாவட்ட பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பிரதேச செயலகங்களுக்கு அறிவிக்கப்பட்டு பயனாளிகளின் பட்டியல்களும் பெறப்படுகின்றன.