முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா

முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பட்டமளிப்பு விழா இன்று காலை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.’ஆறுதல்’ நிறுவனத்தின் ஏற்பாட்டில், நிறுவன இணைப்பாளர் சுந்தரம் திவகலால் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா, வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, வடமாகாண பிரதம செயலாளர் ரமேஷ் விஜயலக்சுமி, வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.சத்தியசீலன், மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் எஸ்.செல்வராஜா, முன்பள்ளி உதவி கல்வி பணிப்பாளர் தம்பையா உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, 450 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பட்டமளிப்பு சான்றிதழ் வழங்கப்பட்டதுடன் விசேட சித்தி பெற்ற 12 முன்பள்ளி ஆசிரியர்களுக்கு பதக்கங்கள் அணிவிக்கப்பட்டது.

இதன்போது, ‘ஆறுதல்’ நிறுவனத்தின் இணைப்பாளர் சுந்தரம் திவகலால் அமைச்சர் மற்றும் ஆளுநருக்கு நினைவுச் சின்னம் வழங்கி வைத்தார்.

Recommended For You

About the Author: Editor