முன்பள்ளி ஆசிரியர்களுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்: அமைச்சர் டக்ளஸ்

முன்பள்ளி ஆசிரியர்களுக்கு நிரந்தர வேலைவாய்ப்பினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.அதேவேளை, மாத கொடுப்பனவினை அதிகரிப்பதற்கும், சீருடைகள், துவிச்சக்கரவண்டிகள் மற்றும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில கற்கை நெறியினை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அவர் கூறினார்.

முன்பள்ளி மாணவர்கள் ஆரம்பத்தில் இருந்தே ஆங்கில சொற்பதங்களை இலகுவாக கற்கக்கூடிய வகையில் இருப்பதுடன், சிறப்பான வழியினை பெற்றுக் கொள்வதற்கும் ஏதுவாக இருக்குமென்றும், முன்பள்ளிகளை அபிவிருத்தி செய்வதற்கு யுனிசெப் நிறுவனத்தில் நிதியுதவி பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுத்த தருவதாக வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி உறுதியளித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

முன்பள்ளி சிறுவர்களுக்கு நல்ல கல்வியை வழங்க வேண்டும் என்ற நோக்கத்துடன், முன்பள்ளி ஆசிரியர்களுக்கு டிப்ளோமா கற்கை நெறியினை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதால் 2013ஆம் ஆண்டு முதல் கற்கை நெறி மேற்கொள்ளப்படுமென்றும் அவர் மேலும் கூறினார்.