முன்னுரிமை அடிப்படையில் காப்பட் வீதி

பருத்தித்துறைப் பிரதேச சபைக்குட்பட்ட பொற்பதி வீதி முன்னுரிமை அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு காப்பட் வீதியாக மாற்றப்படும் என பருத்தித்துறைப் பிரதேச சபைத் தவிசாளர் பொன்னுத்துரை சஞ்சீவன் திங்கட்கிழமை (25) தெரிவித்தார்.

???????????????????????????????

குடத்தனை வடக்குப் பகுதியையும் கடற்கரையையும் இணைக்கும் 3 கிலோமீற்றர் நீளமான பொற்பதி வீதியானது, மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும், அதனைத் திருத்தித் தரும்படி கோரி குடத்தனை வடக்கு மற்றும் பொற்பதி கடற்றொழிலாளர் சங்கங்கள் இணைந்து போராட்டமொன்றை திங்கட்கிழமை (25) முன்னெடுத்தன.

மந்திகை சந்தியில் இருந்து ஆரம்பித்த போராட்டம், ஊர்வலமாக பருத்தித்துறைப் பிரதேச சபை முன்னலில் முற்றுகைப் போராட்டமாக இடம்பெற்றது.

இதன்போது, கடிதங்கள் மூலமும் நேரடியாகவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்ட போதும், மேற்படி வீதி இன்னமும் புனரமைக்கப்படாமல் இருக்கின்றதாகவும், இதனால் போக்குவரத்துக்குச் சிரமங்களை எதிர்நோக்குவவதாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பில் பிரதேச சபைத் தவிசாளரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் தொடர்ந்து கூறுகையில்,

மேற்படி வீதியானது கடந்த 2005ஆம் ஆண்டு புனரமைப்புச் செய்யப்பட்டது. கிராமங்களை இணைக்கும் வீதியென்பதால் அதனூடாக கனரக வாகனங்களை கொண்டு செல்ல முடியாது. இருந்தும், கனரக வாகனங்கள் கொண்டு செல்லப்பட்டமையால் வீதி விரைவில் சேதமடைந்துள்ளது.

எமது பிரதேச சபைக்குட்பட்டு, 40 கிராமங்களை இணைக்கும் 850 சிறு வீதிகள் காணப்படுகின்றன. அனைத்து வீதிகளும் புனரமைக்க வேண்டிய நிலையிலேயே இருக்கின்றன.

ஆகையால், படிப்படியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டே வீதிகள் புனரமைக்க வேண்டிய நிலை காணப்படுகின்றது.

அத்துடன், அவ்வாறு வீதிப் புனரமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்யும் போது, பொற்பதி வீதி புனரமைப்புக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டு காப்பற் போடும் பணிகள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: Editor