முன்னாள் போராளிகள் 1200 பேரைத் தேடும் பணியில் பாதுகாப்பு தரப்பினர்!

Sri_Lankan_Armyஇலங்கை பாதுகாப்பு தரப்பினரிடம் சரணடையாத மற்றும் புனர்வாழ்விற்கு உட்படுத்தப்படாத நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க முன்னாள் உறுப்பினர்கள் 1200 பேர் தற்போதும் மக்களுடன் மக்களாக மறைந்து வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

வடக்கு பாதுகாப்பு பிரிவினரினரால் கடந்தவாரம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 400 பேர் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களில் இருப்பதாக அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனையோர் வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதாக பாதுகாப்பு பிரிவினரின் அறிக்கைளில் கூறப்பட்டுள்ளது.

இவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கை தொடர்பில் கவனம் செலுத்துவதாகவும் வடக்கு பாதுகாப்பு தரப்பு தெரிவித்துள்ளது.