முன்னாள் போராளிகளும், வடக்கு முக்கியஸ்தர்களும் மஹிந்தவுடன் கைகோர்ப்பு?

எதிர்வரும் தேர்தல்களில் முன்னாள் விடுதலைப்புலிகள் உறுப்பினர்களும், வடக்கு தமிழ் சமூகத்தின் முக்கியஸ்தர்களும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் போட்டியிட முன்வந்துள்ளதாக பொதுஜன முன்னணியின் வடமாகாண பொறுப்பாளர் ரஞ்சித் சமரகோன் தெரிவித்துள்ளார்.

நேற்று அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மஹிந்தவின் காலத்தில் வடக்கில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பாக இன்றும் வடக்கு மக்கள் தமது பாராட்டுகளைத் தெரிவித்துவருகின்றனர் எனக் குறிப்பிட்ட சமரகோன், வடக்கில் மட்டுமன்றி தெற்குவாழ் தமிழ் மக்களும் மஹிந்தவிற்கு ஆதரவு தெரிவிக்கின்றனர் எனவும் கூறியுள்ளார்.

இவ்வாறான மக்கள் எப்போதுமே சுதந்திரக்கட்சிக்கு தமது வாக்குகளை அளிக்கமாட்டார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றிபெற மஹிந்த தீவிர செயற்பாடுகளை முன்னெடுத்துவருவதோடு, வடக்கு கிழக்கிலும் தமது ஆளுமையை நிலைநாட்ட அதீத கவனம் எடுத்துவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related Posts