முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ ஆலோசனைகள் இன்று ஆரம்பம்

புனர்வாழ்வு பெற்று சமூகத்தடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகளின் உடல்நலம் தொடர்பில் மருத்துவ ஆலோசனைகள் வழங்கும் நடவடிக்கை இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளது.

வடக்கு மாகாணத்தில் 5 மாவட்டங்களிலும் தெரிவுசெய்யப்பட்ட வைத்தியசாலைகளில் மருத்துவ அதிகாரிகளிடம் ஆலோசனைகள் மற்றும் சேவைகளை முன்னாள் போராளிகள் பெற்றுக்கொள்ள முடியும் என வடக்கு மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக முன்னாள் போராளிகளின் உடல்நலன்கள் தொடர்பாக தமது அமைச்சு கவனம் செலுத்த தீர்மானித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.

புனர்வாழ்வு பெற்றவர்கள் தமது உடல்நலனில் மேற்கொள்ளகூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அவர்களுக்கு மருத்துவ ஆலோசனைகளையும், மருத்துவ கவனிப்பையும், வழங்க வடக்கு மாகாண சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துவருவதாக அவர் கூறியுள்ளார்.

மருத்துவ ஆலோசனைகளை பெறவிரும்புவோர் மாவட்ட வைத்தியசாலைகளிலுள்ள வரவேற்பவரை அணுகி மருத்துவ பரிசோதனை நடைபெறும் இடத்துக்கு செல்லுமாறு அவர் வேண்டுகோள்விடுத்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

விச ஊசி விவகாரம், முன்னாள் போராளிகளுக்கு மருத்துவப் பரிசோதனை ஆரம்பம்!

Recommended For You

About the Author: Editor