முதியோருக்கான 1000 ரூபா கொடுப்பனவு 23 ஆம் திகதி

Money_cashதென்மராட்சி பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதுக்கு மேற்பட்டோருக்கான ஜனவரி மாதத்துக்குரிய ஆயிரம் ரூபா கொடுப்பனவு எதிர்வரும் 23 ஆம் திகதி வழங்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கொடுப்பனவுக்கு தெரிவு செய்யப்பட்ட முதியோருக்கு பிரதி மாதங்களின் 23 ஆம் திகதியே வழங்கப்பட வேண்டும் என அறிவிக் கப்பட்டதையடுத்து பட்டியல் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இந்தக் கொடுப்பனவு பெறுவோர் தத்தமது அஞ்சல் அலுவலகங்களில் இந்தக் கொடுப்பனவை 23 ஆம் திகதி பெற்றுக் கொள்ளலா மெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் காலங்களில் பொது சன மாதாந்த உதவிப் பணம் அந்தந்த மாதங்களின் முதல் வாரத்திலும், ஆயிரம் ரூபா கொடுப்பனவு 23 ஆம் திக தியும் வழங்கப்படல் வேண்டு மென அறிவிக்கப்பட்டுள்ளது.