முதியவரின் சடலம் மீட்பு

body_foundயாழ்ப்பாணத்தில் வீட்டுக்கிணற்றிலிருந்து முதியவர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நீராவியடியைச் சேர்ந்த 54 வயதான அபூர்வசிங்கம் சிறிகாந்தனின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

மூன்று பிள்ளைகளின் தந்தையான இவர் 10 வருடங்கள் ஜேர்மனியில் வசித்து வந்ததாகவும் அங்கிருந்து நாட்டுக்கு திருப்பியனுப்பப்பட்ட நிலையில் அவர் வீட்டில் தனியாக வசித்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அவருடைய மூன்று பிள்ளைகளும் ஜேர்மனியில் வசிப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அயலவர் பக்கத்து வீட்டுத்தோட்டத்திலிருந்து ஒருவகையான துர்நாற்றம் வீசியது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்தே பொலிஸார் அவரது வீட்டுக்கிணற்றிலிருந்து சடலத்தை மீட்டுள்ளனர்.

சடலம் தொடர்பில் யாழ் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Recommended For You

About the Author: Editor