முதல் 60 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றமில்லை

mahintha_CIமுதல் 60 அலகு வரை மின் கட்டணத்தில் மாற்றம் ஏற்படுத்தப்படமாட்டாது என்றும் 180 வரை நிவாரணம் வழங்கப்படும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கொழும்பு, கெம்பல் மைதானத்தில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மே தின கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மின் கட்டண அதிகரிப்பிற்கு எதிராக நாடளாவிய ரீதியில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்ற நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்ட அறிவிப்பை விடுத்துள்ளார்.