முதல்வர் தெரிவில் தனது தலையீடு இருக்கவில்லை : வடக்கு ஆளுனர்!

யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் மட்டுமே தங்கிருப்பதாவும் வடமாகாண ஆளுநர் கூறியுள்ளார்.

இமானுவேல் ஆர்னோல்ட்நியமிக்கப்பட்டதாக தெரிவித்து சனிக்கிழமை வெளிவந்த வர்த்தமானி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசியல் அமைப்பின் பிரகாரம் முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே இருப்பதாகவும் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.

ஆளுனரின் அழுத்தத்தினாலேயே யாழ் மாநகர முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.