முதலாவது LPL கிண்ணம் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு!!

லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது.

இறுதி போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதி இருந்தன.

நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப் பெற்று முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 188 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி சார்ப்பில் அதிக பட்சமாக சுஹைப் மலிக் 46 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய கோல் கிளடியேடர்ஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்களை இழந்து 135 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டுள்ளது.

அதனடிப்படையில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி 53 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இறுதி போட்டியில் ஆபார வெற்றி பெற்றுள்ளது.

 

2020 லங்கா பிரீமியர் லீக் தொடரின் விருதுகள்:

  • வெற்றியாளர் – யாழ்ப்பாணம் ஸ்டாலியன்ஸ்
  • இரண்டாம் இடம் -காலி கிளாடியேட்டர்ஸ்
  • வளர்ந்து வரும் வீரருக்கான விருது – தனஞ்சய லக்ஷன்
  • இறுதிப் போட்டியின் ஆட்ட நாயகன் – சோயிப் மாலிக்
  • தொடரின் ஆட்ட நாயகன் – வாணிந்து ஹசரங்கா