திடீர் சுகயீனம் காரணமாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணம் வந்த அவர் திடீர் சுகயீனம் அடைந்தார்.
தற்போது அவர் நலமாக இருக்கிறார் எனத் தெரிவித்த வைத்தியர்கள் அவருக்கு தொடர் சிகிச்சை அவசியம் தேவை என்றும் தெரிவித்தனர். இதனால் அவர் சில நாள்கள் போதனா வைத்தியசாலையில் தங்கியிருந்து சிகிச்சை பெறுவார் எனத் தெரிய வருகின்றது.