வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும், அமைச்சர் மனோகணேசனுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்றைய தினம் நடைபெற்றிருந்தது. யாழ்ப்பாணத்தில் வைத்து இந்த சந்திப்பு நடைபெற்றுது.
இதன்போது வடமாகாணத்துக்கு மத்திய அரசாங்கத்தினால் வழங்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையத்துக்கான காணித் தெரிவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பின் பின்னர் முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டிருந்தார்.
இதன்போது, வடக்கில் அமைக்கப்படவுள்ள பொருளாதார மத்திய நிலையம் வவுனியா அல்லது அதனை அண்மித்த பகுதிகளில் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.